விடுமுறை (Leave)
லீவு என்பது உரிமை ஒன்று அல்ல சலுகை ஒன்றாகும். அதிபரின் அனுமதியின்றி லீவினை பெற்றுக்கொள்ள முடியாது. லீவினை உரிய படிவத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.
உள்நாட்டில் செலவிடப்படுகின்ற லீவுகளுக்கு பொது 125(a) படிவத்தை பயன்படுத்த வேண்டும். நாட்டிற்கு வெளியே செலவிடும் லீவுக்காக பொது 126 படிவத்தை பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக லீவு விண்ணப்ப படிவம் ஒன்றிற்கு லீவு ஆரம்பிக்கப்படும் திகதிக்கு ஆகக் குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னராவது லீவை அனுமதிக்கும் அதிகாரியின் அலுவலகத்திற்கு கிடைக்கச் வேண்டும்.
நாட்டிற்கு வெளியே செலவிடப்படுகின்ற காலப்பகுதிக்கான லீவுகளுக்காக அனுப்பப்படும் விண்ணப்ப படிவங்கள் முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த லீவு ஆரம்பிக்கப்படும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
அறிவித்தல் இன்றி தொடர்ந்து லீவில் நின்றால் தாபனக் கோவையின் V ம் அத்தியாயம் 7 ஆம் உப விதிப்படி தாமதமாக பதவி விலகியவராக கருதப்படுவார். லீவு பதியும் படிவம் B100 ஆகும்.
அனுமதிக்கப்பட்ட லீவுகள் தொடர்பான பதிவுப் புத்தகம் ஒன்றினை பொது 190 படிவத்தின் பிரகாரம் பேணி வருதல் வேண்டும்.
உத்தியோத்தர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படும் இடத்து, அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர் எத்திணைக் களத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டாரோ அத்திணக்களத்தின் தலைவர் புதிய திணைக்களத்தின் தலைவருக்கு பின்வரும் தகவல்களை அனுப்புதல் வேண்டும்.
உத்தியோகத்தர் தனது முதல் நியமனத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டு காலப்பகுதியிலும் பெற்றுக் கொண்டுள்ள மொத்த ஓய்வு/சுகவீன லீவுகளின் எண்ணிக்கை, அரைச் சம்பள லீவுகளின் எண்ணிக்கை, மற்றும் சம்பளம் மற்ற லீவுகளின் எண்ணிக்கை மற்றும் குறித்த வருடத்தினுள் அவர் பெற்றுள்ள மொத்த அமைய லீவுகளின் எண்ணிக்கை.
அலுவலகத்திற்கு வெளியே செல்வதற்கான அனுமதி
அனுமதியினை பெறாது தனது கடமை நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு உத்தியோகத்தர் ஒருவருக்கு அனுமதி கிடையாது.
விடுமுறைகளின் வகைகள்
1. அரைநாள் விடுமுறை
2. குறுகிய விடுமுறை
3. கற்கை விடுமுறை
4. சமயோசித விடுமுறை அல்லது அமைய விடுமுறை (Casual Leave)
5. சுகவீன விடுமுறை (Medical Leave)
6. பிரசவ விடுமுறை
7. ஓய்வு விடுமுறை
8. விபத்துக்கான விடுமுறை அல்லது விஷேட சுகவீன விடுமுறை
9. கடமை விடுமுறை
10. அரைச்ச சம்பள விடுமுறை
11. சம்பளமற்ற விடுமுறை
அரை நாள் லீவு
கல்வி அமைச்சின் 1981/13சுற்று நிருபத்திற்கு அமைய ஒரு ஆசிரியர் அரை நாள் லீவு பெறுவதாயின் தனது கடமை நேரத்தில் அரைவாசி நேரத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரை நாள் லீவை இரண்டு விதமாக பெற்றுக் கொள்ளலாம்
1. முன் அரை நாள் லீவு
2. பின் அரை நாள் லீவு
முன் அரை நாள் லீவை பெற்றுக் கொள்ளும் ஆசிரியர் 10.30க்கு முன்னர் கையொப்பமிட்டு தனது வரவை உறுதிப்படுத்த வேண்டும்.
பின் அரைநாள் லீவை பெற்றுக் கொள்ளும் ஒரு ஆசிரியர் 10.31 இற்கு கையொப்பம் இட்டு வெளியேறலா
குறுகிய லீவு
சுற்று நிருபம் 3/1A/2/353(1982.02.27)
ஒரு மணித்தியாலம் பெறலாம். மாதம் இரண்டு தடவை பெறலாம். பிரத்தியேக பதிவேடு காணப்படும். அதிபர் அங்கீகரிக்க வேண்டும்.
சமயோசித லீவு அல்லது அமைய லீவு (Casual Leave)
தாபனவிற் கோவை அத்தியாயம் xii(24)
21 நாட்கள்
சுகவீனம், நீதிமன்றத்தில் ஆஜராதல், உறவினர்களின் சுகவீனம், திருமணம் என்பவற்றுக்கு பெறலாம்.
தொடர்ச்சியாக ஆறு தினங்கள் அதிபர் வழங்கலாம்.
சனி, ஞாயிறு, போயா தினங்கள் லீவாகக் கருதப்படாது.
சுகவீன லீவு
ஆசிரியர்களுக்கு 20 நாட்கள்.
இரண்டு நாட்களுக்கு மேல் எனில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வைத்தியரின் வைத்திய அத்தாட்சி பத்திரம் அவசியம். (பொது நிர்வாக சுற்றறிக்கை 21/92)
தனியார் வைத்திய அத்தாட்சி பத்திரம் தொடர்ந்து 14 நாட்கள் வழங்கப்படலாம்.இதனை அதிபர் அங்கீகரிப்பார்..
அதிக நாட்கள் எனின் அரசாங்க வைத்தியரின் அத்தாட்சி பத்திரம் அவசியம்
கற்கை லீவு
அரசாங்கத்தால் வழங்கப்படும் உள்நாட்டு வெளிநாட்டு கற்கைகளுக்கு இவ் லீவு வழங்கப்படும்.
PGDE,PGDEM, தொலைக் கல்விக்கு வாரத்திற்கு ஒரு நாள் வழங்கப்படும்.
இவ்வாறான கற்கை நெறிகளின் பரீட்சைகளுக்கு பரீட்சை தினத்திற்கு முன் இரண்டு வாரங்கள் வழங்கப்படும்.
திறந்த பல்கலைக்கழக கற்கை, டிப்ளோமா கற்கைகளுக்கு வாரத்திற்கு ஒரு நாள் பெறலாம்.
0 Comments